நீலகிரியில் பெய்த கனமழையால் மண்சரிவு; சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

1

-நமது நிருபர்-

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வருகைபுரியும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா எச்சரிக்கை விடுத்தார். அவர், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக, ஊட்டி செல்லும் மக்கள் மலைப்பாதைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

* நீர்வீழ்ச்சிகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு செல்ல கூடாது.

* நிலச்சரிவுகள், மரங்கள் விழுதல், பாறைகள் சரிதல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்; மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

* அத்தியாவசிய தேவையை தவிர பொதுமக்கள் பொது இடங்களுக்கு மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை மரத்தின் அடியில் நிறுத்தக்கூடாது.

*நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும். மழை பெய்யும்போது மக்கள், மின்கம்பங்கள், மின்கம்பிகளை தொடக் கூடாது.

* அரசு பஸ் சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை நிறுத்தப்படுவதாக கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்தார். அவர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மக்கள் எவ்வித அச்சம் அடைய தேவையில்லை என்று கூறினார்.

உதவி எண்கள்!

இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, மக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

* ஊட்டி- 0423-24455772,

* குன்னூர்- 0423-2206002,

* கூடலூர்- 04262-261296

* குந்தா- 0423-2508123,

* பந்தலூர்- 04262-220734

Advertisement