டூவீலர் வாகன உதிரிபாகங்களை விற்க பதுக்கிய டிரைவர் கைது

தளி:அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கலிம் அலி, 38. தனியார் டிரான்ஸ்போர்டில் சரக்கு வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த, 18ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உப்பாரப்பள்ளியில் உள்ள யுனோ மிண்டா நிறுவனத்தில் இருந்து, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகன உதிரிபாகனங்களை ஏற்றிக்கொண்டு, ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு புறப்பட்டார்.

ஆனால், நிறுவனத்திற்கு சென்று உதிரிபாகங்களை ஒப்படைக்கவில்லை.அதனால், டி.வி.எஸ்., நிறுவனம் தரப்பில், யுனோ மிண்டா நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தளி போலீசில், யுனோ மிண்டா நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி சார்லஸ் ராபர்ட், 43, நேற்று புகார் செய்தார். கலுகொண்டப்பள்ளியில் தங்கியிருந்த கலிம் அலியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, பழைய இரும்பு கடையில் விற்று பணம் சம்பாதிப்பதற்காக, உதிரிபாகங்களை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகன உதிரிபாகங்களை பறிமுதல்
செய்தனர்.

Advertisement