அம்பேத்கர் சிலைக்கு மாலை

அரூர்: உத்தரப்பிரதேச மாநிலம், சாரநாத்தில் கடந்த, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தென்னிந்திய பவுத்த கூட்டமைப்பின் தேசிய மாநாடு நடந்தது. தேசிய நிறுவன தலைவர் மவுரியா புத்தா தலைமை வகித்தார்.

இதில், தர்மபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த புத்தமணி சாக்ரடீஸ் என்பவருக்கு அசோகா தம்மசக்கர விருதை, உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் சண்டிமா தேரோ வழங்கினார். விருது பெற்று, அரூர் திரும்பிய புத்தமணி சாக்ரடிஸ் அரூர் கச்சேரிமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement