அரூர் அரசு பள்ளியில் திருட்டு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சோரியம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பள்ளியின் ஆய்வக அறை கதவின் பூட்டை உடைத்து, 11 லேப்டாப் ஹார்டு டிஸ்க்குகளை திருடிச் சென்றுள்ளனர். தலைமையாசிரியர் ராதாமணி புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த காலாண்டு விடுமுறையில், அச்சல்வாடி மற்றும் கீழானுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், ஹார்டு டிஸ்க்குகள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement