குட்கா விற்றவர் கைது

ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று (அக்.,23) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பகண்டைகூட்ரோட்டைச் சேர்ந்த சங்கர், 61; என்பவர் தனது டீ கடையில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி விற்றது தெரியவந்தது.

இதையடுத்து சங்கரை கைது செய்து, அவரிடமிருந்த 35 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement