லட்சுமி சோரடியா பள்ளியில் சிறப்பு பட்டிமன்றம்

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

செந்தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் மணி டாக்ஸ் யூ டியூப் ஆகியன இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பள்ளி தாளாளர் மாவீர்மல் சோராடியா, பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். ‘இன்றைய இளைய தலைமுறையை பெரிதும் உயர்த்துவது உறவா... நட்பா...என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. செந்தாமரை நடுவராக செயல்பட்டார். பட்டிமன்றத்தில் லட்சுமி சோரடியா மாணவ, மாணவிகள் மற்றும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று வாதிட்டனர்.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement