போலீஸ் பற்றாக்குறையால் டோக்கன் பணி நிறுத்தம்

தேனி: தேனியில் பெரியகுளம், மதுரை, கம்பம் ரோட்டில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள், ஆட்டோக்கள் இயங்குகின்றனர். இதனால் நேரு சிலை உள்ளிட்ட பகுதிகளில் அதிவேகமாக செல்லும் ஆட்டோக்களால் விபத்துகள் ஏற்படுகின்றனர். தேனியில் உரிய ஆவணங்கள் உள்ள ஆட்டோக்களுக்கு மட்டும் ‘டோக்கன்’ ஒட்டும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். 80 ஆட்டோக்களுக்கு டோக்கன் ஒட்டப்பட்டது. ஆனால் தற்போது அப்பணி முடங்கி உள்ளது. தேனி டிராபிக் போலீஸ் ஸ்டேஷனில் சுமார் 10 போலீசார் உள்ளனர். அவர்கள் போக்குவரத்து சீரமைப்பு, ரோந்து பணிகள் ஒதுக்கப்படுகிறது. இதனால் ஆட்டோக்களுக்கு டோக்கன் ஒட்டும் பணிக்கு பாதித்துள்ளது. தேனியில் தகுதியுள்ள ஆட்டோக்களை கண்டறிவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி., பிரவீன் கவுதம் இப்பணிக்கு போலீஸ் ஒதுக்கீடு செய்ய மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement