ஏலம் எடுத்த குத்தகைதாரரிடமே சந்தையை ஒப்படைக்க உத்தரவு
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வாரந்தோறும், புதன்கிழமை மாட்டு சந்தை நடைபெறுகிறது. இங்கு, பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும்.
கடந்த ஆண்டு, சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமையை ஏலம் எடுத்தவர், அடியாட்களை வைத்து, மாடுகள் விற்க, வாங்க வருபவர்கள், வாகன ஓட்டிகளிடம், அடாவடியாக வசூல் செய்வதாக புகார் எழுந்தது.
மணப்பாறை நகராட்சி நிர்வாகம், தனியார் சுங்கம் வசூலிக்கும் உரிமத்தை ரத்து செய்ததோடு, நேரடியாக செப்டம்பர் மாதம், சந்தையில் சுங்கம் வசூலிப்பதற்கான ஏலம் நடத்தியது. இதில், மாயழகு என்பவர், 3.16 கோடி ரூபாய்க்கு ஏலத்தை எடுத்தார்.
ஆனால், நகராட்சி தீர்மானத்தில், கவுன்சிலர்கள் சிலர் கையெழுத்து போட மறுத்ததால், இந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது. மாயழகுவிடம் சந்தையை ஒப்படைக்காமல், நகராட்சி நிர்வாகமே சந்தையை நடத்தியது.
ஏலம் எடுத்தும் மாட்டுச் சந்தை கைக்கு வராததால், மாயழகு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், மனு தாக்கல் செய்தார்.
விசாரித்த நீதிமன்றம், ‘ஒரு வாரத்தில், ஏலம் எடுத்தவருக்கே குத்தகை உரிமத்தை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து