மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூரில் எலக்ட்ரீசியன், மின்சாரம் தாக்கி பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன் மகன் வெங்கடேசன், 38. அவர், கடந்த 22ம் தேதி திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் இயங்கி வரும், தனியார் பொருட்காட்சியில், மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, அவர் மின்சாரம் தாக்கி, மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement