வைக்கோல் வேன் கவிழ்ந்து விபத்து

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விருத்தாசலம் – வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், இன்று (அக்.,24) இரவு 8:30 மணியளவில், வைக்கோல் ஏற்றிக்கொண்டு, மஹிந்திரா பிக் அப் வேன் சென்றது. திடீர் மழையால், கொடுக்கூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வந்து, டிரைவரை மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால், வேப்பூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement