நாளை தமிழக சட்டசபை உறுதிமொழிக்குழு வருகை

கரூர்:'மாவட்டத்தில், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய, தமிழக சட்டசபை உறுதிமொழிக்குழுவினர், நாளை வருகின்றனர்' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள, தமிழக சட்டசபை உறுதிமொழிக்குழு தலைவர் விஜய் சரவணன் தலைமையில், நாளை வருகின்றனர். காலை முதல் மதியம் வரை கரூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்ந்து, மதியம், 2:00 மணிக்கு, கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில், அரசு உறுதிமொழிகள் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிறைவேற்றப்பட்ட பணிகளின் விபரங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement