மழையால் வடிகால் பாலம் சேதம்
கரூர்:கரூர், வடக்கு காந்திகிராமம், இ.பி., காலனி பிரதான சாலையிலிருந்து,
20-க்கும்
மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள ஜே.ஜே., கார்டன் பகுதிக்கு செல்லும்
பிரிவு சாலை பிரிகிறது.
இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக,
மழைநீர் வடிகால் கால்வாயின் குறுக்கே சிறு கான்கிரீட் பாலம்
அமைக்கப்பட்டுள்ளது. கன மழையால், இந்த சிறுபாலத்தில் அரிப்பு
ஏற்பட்டுள்ளது. பாலத்தின் நடுப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்
கான்கிரீட் தளம் பெயர்ந்து ஆங்காங்கே ஆபத்தான பள்ளங்கள்
உருவாகியுள்ளன.
மேலும், பாலத்தோடு இணையும் தார்ச்சாலையிலும் மண்
அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவிலான குழிகள் விழுந்துள்ளன. வடிகால் பாலம்
நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. பகல் நேரங்களிலேயே
கவனமாக கடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம்
இல்லாதபோது, பள்ளங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. இருசக்கர
வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடையும் அபாயம்
தொடர்கிறது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன் அதிகாரிகள் துரித
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'