கொட்டி தீர்த்த கன மழை வீடுகளில் புகுந்த மழைநீர்
நாமக்கல்:நாமக்கல்
நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்றிரவு, 8:00 மணிக்கு இடி
மின்னலுடன் கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, இரவு, 9:30 மணி வரை
நீடித்தது. நாமக்கல் நகர் மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டார கிராம
பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது.
இதனால் நாமக்கல் நகரின் முக்கிய
சாலைகள், தாழ்வான தெருக்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து
ஓடியது. ராசிபுரம் மற்றும் நாம
கிரிப்பேட்டை பகுதிகளில், 9:00
மணிக்கு மேல் கன மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் பரவலாக பெய்த
மழையால், பல்வேறு இடங்களில் மின் வினியோகம் தடைபட்டது. ராசிபுரம்
பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம்
சாலையில் மழைநீர் வெள்ளம்போல் சென்றது.
* திருச்செங்கோட்டில் பெய்த
கன மழையால், புது பஸ் ஸ்டாண்ட் அருகே எஸ்.எஸ்.டி., சாலையில், வெள்ள
நீருடன், சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து சாலையில் ஓடியது. இதனால் புதிய
பஸ் ஸ்டாண்டில் இருந்து வாகனங்கள் எதுவும் வெளியில் செல்ல முடியாமல்
போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த வெள்ள நீரில்,
20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மூழ்கி பாதிப்புக்குள்ளானது.
மேலும் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து