குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் 13 அடி உயர்வு
கோபி:நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம், ஒரே நாளில், 13 அடி உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, கொங்கர்பாளையம் கிராமத்தில், பவானி வடிநிலப்பகுதியில் குண்டேரிப்பள்ளம் ஆற்றின் குறுக்கே, குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இடது மற்றும் வலது கரை பாசனம் என மொத்தம், 2,498 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. குன்றி, விலாங்கோம்பை ஆகிய இடங்களில் பெய்யும் மழையே, அணைக்கு நீராதாரமாக உள்ளது. மலை முகடுகளுக்கு நடுவே அணை அமைந்துள்ளதால் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
நீர் பிடிப்பு பகுதியில், நடப்பாண்டு ஜனவரி துவங்கியது முதல் மழையில்லை. இதனால் அணையின் முழு கொள்ளளவான, 42 அடியில் கடந்த, 14ல், 19 அடிக்கு மட்டுமே நீர் குட்டையாக தேங்கி நின்றது. இந்நிலையில் கடந்த, 16ல், 57 மி.மீ., 17ல், 63, 18ல், 34, 23ல், 74 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, 21 அடியாக இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மாலை, 6:00 மணி வரை தொடர்ந்து பெய்த பலத்த மழையால்,அணை நீர்மட்டம், 34 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணை நீர்மட்டம் ஒரே நாளில், 13 அடி உயர்ந்துள்ளது.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், ஒரே நாளில் அணை நீர்மட்டம், 13 அடி உயர்ந்துள்ளது. தொடர்மழை இருக்கும் பட்சத்தில், அணை நிரம்பி வெளியேறும் சூழலில், கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை தெரிவிக்க, துறை ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.
மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து