அக்., 27, 28ல் நடக்கும் மாநில கலைத் திருவிழா போட்டிகள்: மழை காரணமாக ஒத்திவைப்படுமா
மதுரை: ‘‘மழை காரணமாக பள்ளி மாணவர்கள் நலன்கருதி அக்.,27, 28ல் நடக்கும் மாநில கலைத் திருவிழா போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும்’’ என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கல்வித்துறை சார்பில் மாணவரின் தனித்திறனை வெளிப்படுத்தும் கலைத் திருவிழா போட்டிகள் ஆண்டுதோறும் நடக்கின்றன. இம்மாதம் துவங்கிய இப்போட்டிகள் 10 – பிளஸ் 2 மாணவர்களுக்கு நிறைவுற்றன.
அக்., 27ல் கோவையில் 6 – 8 ம் வகுப்பு, 28ல் மதுரையில் 1 –5ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில போட்டிகள் நடக்கின்றன. அனைத்து மாவட்டத்தை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை இந்நாட்களில் கோவை, மதுரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறு வயது மாணவர்களை அழைத்துச் செல்வதில் தேவையில்லாத சிரமங்கள் ஏற்படும். எனவே இப்போட்டிகளை நவம்பருக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: மழை பாதிப்பு மாவட்ட மாணவர்களையும் மதுரை, கோவைக்கு ஆசிரியர் அழைத்து செல்ல வேண்டும். மழை நேரத்தில் அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, உணவு ஏற்பாடு செய்வது பெரும் சவாலாக இருக்கும். நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்துள்ளது. 12 மாவட்டங்களில் மழைப் பாதிப்பு உள்ளது. இம்மாவட்ட மாணவர்கள் பங்கேற்பது சிரமம். பல மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்ச், மஞ்சள் என மழைக்கான 'அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் இப்போட்டிகளை ஒத்திவைக்க கல்வி இயக்குநர் லதா (பொறுப்பு) முன்வர வேண்டும் என்றனர்.
மேலும்
-
பிரதமரின் தந்தை குறித்து கார்கே தரம் தாழ்ந்த பேச்சு : கண்டித்து பா.ஜ., இன்று நாடு தழுவிய போராட்டம்
-
அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
-
பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!
-
மழையால் வடிகால் பாலம் சேதம்
-
நாளை தமிழக சட்டசபை உறுதிமொழிக்குழு வருகை