ஒழுங்கு நடவடிக்கை கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை தேவை: அரசுப் பணியாளர்கள் எதிர்பார்ப்பு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசுப் பணியாள்ர சங்க மாவட்ட பொதுக் குழுக்கூட்டம் தலைவர் ஜெயகணேஷ் தலைமையில் நடந்தது. பொருளாளர் சேகர் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் மரியதாஸ் வரவேற்றார். மாநில தலைவர் சத்யமூர்த்தி, துணைத் தலைவர் முருகேஷ், இணைச் செயலாளர் கமலேஷ் பேசினர். மாவட்ட அமைப்புச் செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் குணசேகரன், சண்முகராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
அனைத்து துறைகளிலும் பதவி உயர்வு, முதுநிலை நிர்ணயம் செய்வதில் உள்ள பாரபட்ச நடைமுறைகளை களைய வேண்டும். இலவச திட்டங்களுக்குப் பதில் சாலை, குடிநீர், இலவச மருத்துவம், இலவச கல்வி வதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறை பணியாளர்களின் மீது, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை கோப்புகள் மீது உடனே நடவடிக்கை எடுத்து முடிக்க வேண்டும்.
ஊராட்சி செயலர், சத்துணவு, கிராம உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட தொகுப்பூதிய, மதிப்பூதிய, ஒப்பந்த, தினக்கூலி பணியாளரின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
மேலும்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!
-
ரூ.500 கோடி, 1000 கோடி கொள்ளையடித்து வைத்திருக்கிறீர்களா; ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை