ரூ.500 கோடி, 1000 கோடி கொள்ளையடித்து வைத்திருக்கிறீர்களா; ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி

1

சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி: தேசிய அளவில் 40,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக மின் தட்டுப்பாடு உள்ளது. மத்திய அரசு கணிக்க தவறியதால் தான் மின்சாரத்திற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பில் போய் பணம் வசூலித்தது தான் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கும்பல். ஒரு இடத்தில், இரண்டு இடத்தில் இல்லை, 4 ஆயிரம், 5 ஆயிரம் பள்ளியில் வசூல் செய்தீர்கள். ஓபன் ஆக வைத்து தானே வியாபாரம் செய்து இருக்கிறீர்கள். ஊரு ஊருக்கு டேபிள் போட்டு பள்ளிகளை கூப்பிட்டு குழந்தைகள் பாதுகாப்பு எல்லாம் பரவாயில்லை, நாங்கள் உங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்கிறோம்.

நீங்கள் குழந்தைகள் செத்தாலும் பரவாயில்லை, நாங்கள் சர்டிபிகேட் கொடுக்கிறோம் என்று சொல்லி டேபிள் போட்டு ஒவ்வொரு ஊரிலும் புரோக்கர் போட்டு வசூல் செய்து தானே இப்பொழுது மாட்டி நிற்கின்றீர்கள். ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகள் பாதுகாப்பில் சமரசம் செய்து தானே வசூல் செய்தீர்கள். இப்படி ஒரு கேவலமான வேலையை செய்த ஸ்டாலின், அரசியலை விட்டு விலக வேண்டும்.

இன்னும் எங்களது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வேலை; காசு வைத்து இருக்கிறீர்கள், ரூ.500, 1000 கோடி கொள்ளையடித்து வைத்திருக்கிறீர்களா? இது ஒன்றுக்கு மட்டும் அவரை பதில் சொல்ல சொல்லுங்கள், குழந்தைகள் பாதுகாப்பில் சமரசம் செய்து, அதற்கு நீங்கள் போலி சர்டிபிகேட் கொடுத்து ரூ.300 கோடி, ரூ.400 கோடி வசூலில் செய்ததின் வழக்கை தானே நீங்கள் இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறீர்கள். இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement