பிரதமரின் ஏஜென்டாக தலைமை தேர்தல் கமிஷனர்: காங்., மேலிட பார்வையாளர் குற்றச்சாட்டு

மதுரை: பிரதமர் நரேந்திர மோடியின் ஏஜென்ட் ஆக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் செயல்படுவதாக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ஹர்கரா வேணுகோபால் ராவ் குற்றம் சாட்டினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் குழுவில் முன்பு பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில், நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சரை இடம்பெறச் செய்யும் வகையில் விதிகளில் பா.ஜ., மாற்றம் செய்தது. அதன்பின் நியமிக்கப்பட்ட தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், பிரதமரின் ஏஜென்டாக செயல்படுகிறார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை ஏன் இணைக்க மறுக்கிறார்கள். 2029 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கு சாதகமான தேர்தல் அமைப்பை உருவாக்க திட்டமிடுகின்றனர். த.வெ.க., தலைவர் விஜய் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தமிழக முதல்வராக இருப்பார். அவரை அடுத்த பிரதமர் வேட்பாளர் என த.வெ.க.,வினர் கூறுவது அவர்களுடைய விருப்பம் என்றார். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement