‘நாம் நலமாக இருந்தால் தான் தேசமும் நலமாக இருக்கும்’
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி திடலில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பொதுக்கூட்டத்தில், மாவட்ட தலைவர் அரவிந்தன், நகர தலைவர் தமோதரன், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக அறிவுசார் பிரிவு தலைவர் நீலகண்டன் பேசியதாவது:
பாரத நாடு அனைத்துத் துறைகளிலும் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதால், இந்தியாவுக்குப் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் ராக்கெட் ஏவுவதற்குத் தேவையான கிரையோஜெனிக் இயந்திரத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகள் வழங்கவில்லை. அதை இந்தியாவே ஏன் தயாரிக்கக் கூடாது என, வாஜ்பாய் கேள்வி எழுப்பினார். இன்று பிற நாடுகளைச் சார்ந்திருக்காமல், ராக்கெட் இயந்திரங்களை நாமே தயாரித்து வருகிறோம்.
ஒரே ராக்கெட்டில் 114 செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் விண்ணில் ஏவும் அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் பயணித்து வருகிறோம். இந்த இலக்கை அடைவதில் அரசுக்கு மட்டுமே பொறுப்பு இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு இருக்கிறது.
நாம் நலமாக இருந்தால்தான் தேசமும் நலமாக இருக்கும்’ என்றார்.
மேலும்
-
சந்தை விலை நிலவரம்
-
நீங்க என்ன நினைக்கிறீங்க?
-
விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ‘ஜி.எஸ்.எல்.வி., எப் – 18’ ராக்கெட்
-
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
மனைவி அடித்துக்கொலை செய்து எரிப்பு ? சிதம்பரம் அருகே பரபரப்பு
-
பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்: ஆண்டிபட்டி வாரச்சந்தை ரூ.3.50 கோடியில் கட்டிய கடைகள் வீணாகிறது