ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பழநி: ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பழநியில் ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய ஊர்வலம் திண்டுக்கல் சாலை வழியாக சென்று பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டானா அருகே முடிந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர்.

போலீசார், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement