விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ‘ஜி.எஸ்.எல்.வி., எப் – 18’ ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா: வழி காட் டும் சேவையை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘என்.வி.எஸ்., – 03’ செயற்கைக்கோளை, சுமந்து சென்ற ‘ஜி.எஸ்.எல்.வி., எப் – 18’ ராக்கெட், நேற்று இரவு 11:51 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
அதன்பின், நள்ளிரவு 12:10 மணிக்கு அதன் இலக்கான புவி ஒத்திசைவு மாற்றுப் பாதையில் அந்தச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்துப் பட்டது.
இதன் எடை, 2,232 கிலோ ஆகும். 12 ஆண்டுகள் விண்வெளியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோளில், உள்நாட்டிலேயே தயாரித்த ரூபிடியம் அணுக்கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இருப்பிடங்களை மிகத் துல்லியமாக கணக்கிட உதவும். இதேபோல், முந்தைய தலைமுறை செயற்கைக்கோள்களை விட கூடுதலாக எல்1 சிக்னல் அதிர்வெண் சேர்க்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல்போன்களில் உள்ள வழிகாட்டும் வசதிகளுடன் நேரடியாக இணைக்க மேம்படுத்தும்.
இந்த செயற்கைக்கோள், நம் நாட்டின் நிலப்பரப்பு முழுதும், அத்துடன் நம் எல்லை யைத் தாண்டி 1,500 கி.மீ., துாரம் வரையிலான பிற பிராந்தியங்களையும் உள்ளடக்கிய துல்லியமான இருப்பிடம், வழிகாட்டுதல் சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜி.பி.எஸ்., கருவிக்கு மாற்றாக, உள்நாட்டிலேயே வடிவமைத்த இந்தச் செயற்கைக்கோள், போக்குவரத்து, கடல்சார் செயல்பாடுகள், பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கும் இந்தச் செயற்கைக்கோள் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Scientist அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு