மனைவி அடித்துக்கொலை செய்து எரிப்பு ? சிதம்பரம் அருகே பரபரப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே மனைவியை அடித்துக்கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த மீதிகுடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்தின. பெயின்டர். இவரது மனைவி சிவகாமி, 33; இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார் நேற்று மாலை 6:௦௦ மணி அளவில் மீதிகுடி சுடுகாட்டில் ஒரு உடல் எறியூட்டப்பட்டுள்ளது, இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள்,ஊருக்குள் இறப்பு எதுவும் நடக்கவில்லை. இந்தநிலையில் திடீரென சுடுகாட்டில் எப்படி பிணம் எரியூட்டப்படுகிறது என சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சிதம்பரம் தாசில்தார் சதீஷ்குமார், சிதம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் ஏ.எஸ்.பி., சத்திரியகவின் தலைமையில் அண்ணாமலை நகர் போலீசார் இரவு 9:00 மணிக்கு மீதி குடி கிராமத்திற்கு சென்றனர்.
விசாரணைக்கு பின் ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை செய்தனர். மேலும் அருகிலேயே உள்ள அவரது அம்மா வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை செய்தனர். ரவிச்சந்திரனின் வீடு பூட்டியிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை தொடர்ந்து போலீசார் வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்தனர். வீடு முழுவது சுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருந்தது.
போலீசாரின் விசாரணையில் ரவிச்சந்திரன் அவரது தந்தை கடையிலிருந்து விறகு எடுத்துச்சென்றதாக தெரிகிறது.
மேலும் ரவிச்சந்திரனின் மனைவியையும் காணவில்லை. ரவிச்சந்திரனின் மொபைல் போனும் சுச்சாப் செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்தராறில் ரவிச்சந்திரன் மனைவியை அடுத்து கொலை செய்து,யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் எரித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ரவிச்சந்திரன் பிடிபட்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும். இந்த சம்பவம் மீதிக்குடி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.