தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர்: ஓசூரிலுள்ள ராயக்கோட்டை சாலையில், பாரதியார் நகரில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள தேவி கருமாரியம்மன், சித்தி கணபதி, நவக்கிரகங்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலமுருகன் சன்னதி கும்பாபிஷேக விழா கடந்த, 23ம் தேதி துவங்கியது.

அன்று காலை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், முதல்கால யாகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால யாகம், காலை, 7:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர் தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான் உட்பட பல ஆயிரக்கணக்கான
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement