புளியஞ்சோலையில் காட்டாற்று வெள்ளம்

சேந்தமங்கலம்:கொல்லிமலையில், 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ரம்மியமான இயற்கை சூழல் அதிகம் இருப்பதால், இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதனால், கொல்லிமலையில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அவ்வாறு, கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து கொட்டும் தண்ணீர் அடர்ந்த வனம் வழியாக பாய்ந்து, அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை ஆற்றை அடைகிறது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வருவதால், புளியஞ்சோலை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Advertisement