ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டம்

நாமக்கல்:தமிழக சி.பி.எஸ்., ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாவட்ட ஆலோசனை கூட்டம், நாமக்கல் எஸ்.பி.எம்., பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.

செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 2003 பிப்., 1 முதல் 2025 டிச., 31 வரை, சி.பி.எஸ்., திட்டத்தில் ஓய்வு பெற்ற, 50,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அடிப்படை சம்பளம் முதல் பணியாற்றிய காலம் மற்றும் அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2003 முதல் 2025 வரை இறந்த அரசு பணியாளர்கள், 10,000 பேர் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2003 முதல் 2025 வரை பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, மொத்த பண பலன்களை வாங்காதவர்களை தமிழக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement