4 வயது குழந்தை உள்பட பலரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்
ராசிபுரம்:ராசிபுரம்
அடுத்த பட்டணம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பரமேஸ்வரன் நகர் பகுதியில்,
கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு
வெறிநாய், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வீட்டின் முன்
விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
நாயின் பிடியில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.இந்த
வெறிநாய் தாக்குதலில் பரமேஸ்வரன் நகரை சேர்ந்த ஜெயக்குமார், 30,
என்பவரது மகள் கவிஸ்ரீ, 4, பலத்த காயமடைந்தார். மேலும், மணிகண்டன்
மகன் மவுலி, முருகேசன் மனைவி சாந்தி, ராமசாமி மனைவி லட்சுமி,
பாலசுப்ரமணியம் மகன் விஷால் உட்பட, 7 பேரை கடித்தது
குறிப்பிடத்தக்கது. பலத்த காயமடைந்த குழந்தை கவிஸ்ரீ, ராசிபுரம்
அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று
வருகிறார்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில்,
''பரமேஸ்வரன் நகர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை
பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, டவுன் பஞ்., நிர்வாகத்திடம்
பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்
காரணமாக, தற்போது குழந்தை உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, டவுன் பஞ்., நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து,
தெருநாய்களை பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றனர்.
மேலும்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!
-
ரூ.500 கோடி, 1000 கோடி கொள்ளையடித்து வைத்திருக்கிறீர்களா; ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை