பு.புளியம்பட்டி நகராட்சிக்கு துாய்மை பணிக்காக பேட்டரி வாகனம் வழங்கல்
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி
நகராட்சி சுகாதார பணிகளுக்காக, ரூ.15.40 லட்சம் மதிப்பில் புதிய
பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.
புன்செய்புளியம்பட்டி
நகராட்சியில் உள்ள, 18 வார்டுகளில் தினமும், 10 டன் குப்பை
சேகரமாகிறது. நகராட்சி சார்பில், நிரந்தர துாய்மை பணியாளர்களும்,
ஒப்பந்த துாய்மை பணியாளர்களும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், திடக்கழிவு மேலாண்மை
திட்டத்தின் கீழ், சுகாதார பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக,
புளியம்பட்டி ரோட்டரி சங்கம், யாத்ரா அறக்கட்டளை சார்பில், 6 புதிய
பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி கமிஷனர் கருணாம்பாள்
தலைமையில் நேற்று நடந்தது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் தனசேகர்,
சண்முகம் ஆகியோர் புதிய பேட்டரி வாகனங்களை நகராட்சியிடம்
ஒப்படைத்தனர்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் கூறுகையில்,
'நகராட்சியில் வீடு,வீடாக சென்று குப்பையை சேகரிக்கும் வகையில், ரூ.15
லட்சத்து, 40 ஆயிரம் மதிப்பில் மதிப்பில், 6 பேட்டரி வாகனங்கள்,
வாங்கப்பட்டு, நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. புதிய பேட்டரி
வாகனங்கள், விரைவில் பயன்பாட்டிற்கு வரும்,''
என்றனர்.
மேலும்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!
-
ரூ.500 கோடி, 1000 கோடி கொள்ளையடித்து வைத்திருக்கிறீர்களா; ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை