நர்சு, இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

கரூர்:திருச்சி மாவட்டம், குழுமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில் மனைவி சவுந்தர்யா, 20; இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து, கரூர் அருகே தொழிற்பேட்டை செல்வா நகரில் உள்ள தாய் மரகதம், 40, என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த, 24ல் வீட்டிலிருந்து வெளியே சென்ற சவுந்தர்யா, வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும் சவுந்தர்யா செல்லவில்லை. இதுகுறித்து, தாய் மரகதம் அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நர்சு மாயம்

அரவக்குறிச்சி ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் சுஜித்ரா, 24; இவர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். கடந்த, 22ல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற சுஜித்ரா, மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதுகுறித்து, சுஜித்ராவின் தந்தை கலியபெருமாள், 60, அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement