தொடர் மழையால் கோரை அறுவடை முடக்கம்
கரூர்:மாவட்டத்தில்,
காவிரி ஆற்றுப்படுகையில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கோரை
சாகுபடி மற்றும் அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கரூர்
மாவட்டத்தில், வாங்கல், என்.புதுார், பிச்சம்பாளையம்,
கடம்பங்குறிச்சி, தோட்டக்குறிச்சி, நெரூர், மரவாப்பாளையம்
உள்ளிட்ட காவிரி ஆற்றோர பகுதிகளில், 3,706 ஏக்கர் பரப்பளவில் கோரை
சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும்
கோரைப்புல், பாய் உற்பத்திக்கு பெயர் பெற்ற, சேலம் மாவட்டம், ஓமலுார்
உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
பொதுமக்கள்
உறங்குவதற்கு பயன்படும் பாரம்பரிய மற்றும் நவீன ரக பாய்கள்
தயாரிக்கப்படுகின்றன. கட்டட கட்டுமான பணிகளில் கான்கிரீட்
பதப்படுத்துவதற்கும், வெயிலை தடுக்கும் இயற்கை திரைச்சீலைகள்
அமைப்பதற்கும், கோரை பெருமளவில் பயன்படுகிறது. கடந்த, ஒரு வாரமாக
வடகிழக்கு பருவமழை கோரை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோரை விவசாயிகள் கூறியதாவது:
கடந்த,
ஜனவரி மாத இறுதியில் பாசன வாய்க்கால்களில் நீர்வரத்து
நிறுத்தப்பட்டது. கோடைக்காலத்தில் நிலத்தடி நீர் மற்றும் மண்ணில்
இருந்த எஞ்சிய ஈரப்பதத்தை மட்டுமே நம்பி மிகவும் சிரமப்பட்டு
பயிர்களை காப்பாற்றினோம். வழக்கமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய
மேட்டூர் அணை, நடப்பாண்டு நீர்வரத்து தாமதத்தால், கடந்த செப்., 1ல்
தான் திறக்கப்பட்டது. கோரை பயிரிட்டு அறுவடை நிலையை எட்ட
குறைந்தபட்சம், ஐந்து மாதங்கள் வரை ஆகும்.
அணை தாமதமாகத்
திறக்கப்பட்டதால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, தற்போது
சந்தைக்கு புதிய கோரையின் வரத்து மிக குறைவாகவே உள்ளது. சந்தை
வரத்து சரிந்ததன் காரணமாக, 16 இன்ச் சுற்றளவு கொண்ட, 6 முடிகள்
அடங்கிய ஒரு கோரைக்கட்டின் விலை, 1,450 முதல், 1,500 ரூபாய் வரை உயர்ந்து
விற்பனையாகிறது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால்
விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கோரை அறுவடை
பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்யப்பட்டு,
வயலோரங்களிலும் வைக்கப்பட்டிருந்த கோரைக்கட்டுகள் மழைநீரில்
மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து