டில்லி பேரணியில் கர்ப்பிணி பத்திரிகையாளர் மீது தாக்குதல்; ராகுலுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
-நமது டில்லி நிருபர்-
கடந்த அக்டோபர் 12ம் தேதி, எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக டில்லியில் நடந்த பேரணியில் ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தினர். அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 'ஒன்இந்தியா' செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் பத்திரிகையாளர் ரிச்சா பராஷர் என்பவரை ராகுல் பிடித்து தள்ளி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
3 மாத கர்ப்பிணிப் பத்திரிகையாளர், ராகுல் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பேரணியின்போது, தான் 11 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் கர்ப்பமாக இருந்த போதும், என்னை பிடித்து ராகுல் கீழே தள்ளி விட்டார்; ராகுல் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.
இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இன்று (அக்டோபர் 27) வழக்கை, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி விசாரித்தனர். இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு ராகுலுக்கும், இதர நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
என் வயதான தாயை அவமதித்து விட்டார்கள் என ஒருவர் போட்ட அதே சீன் நான் கர்ப்பிணி நான் கர்ப்பிணி நான் கர்ப்பிணியாக்கும் ....
உன்னை போல் ஒரு சிலரால் நான் எடுத்த முடிவு
உனக்கு தான் தாய், தாய்நாடு இரண்டின் மீதும் நன்றி விசுவாசம் கிடையாதே.மதம் மட்டும் தானே பெரிது.
உன்னுடைய தராதரம் கண்டு உலகம் சிரிக்கிறது.
அப்துல் பாய்...என்ன ஒரு ஈன பிறவி
இதுவரை ராகுல் சுமார் 100 வழக்குகளில் மேல் இருக்கு. ஒரு தண்டனை கூட கிடைக்கவில்லை. நீதிமன்றமே தீர்ப்பு ஆளுக்கு தகுந்தவாறு தீர்ப்பு கொடுக்கிறது..
கர்ப்பிணி பெண் இது மாதிரி ரிஸ்க் எடுக்கலாமா? அப்பொறம் அடி பட்டிருச்சு, கிள்ளிட்டாங்கன்னு கேஸ் போட வேண்டியது.
கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்திய ராவுளுக்கு சிறப்பான தண்டனையை உடனே வழங்கவேண்டும். வெறும் நோட்டீஸ் மட்டும் அனுபிச்சா போதாது.
கர்ப்பிணி பெண். பத்திரிகை நிருபர். ராகுல் தொட, தள்ள வேண்டிய அவசியம் இல்லை. புகார் அடிப்படையில் ராகுலை நீதிமன்றம் வரவழைத்து பதிலை எழுதி வாங்கி தண்டிக்க /விடுவிக்க வேண்டும். ஒவ்வொரு எஃப் ஐ ஆர் ஒரு பதக்கம் என்று கூறி, போலீஸ், நீதிமன்ற நடவடிக்கையை கேலி பேசும் ஒரு தலைவர்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்.
கனமான சுப்ரீம் கோர்ட் நீதி மான்களே, இது ஒரு செஸ்ஸின்ஸ் கோர்ட் விசாரிக்க வேண்டிய தேங்க மூடி கேஸ், கபில் சிபல் அப்புறம் வரட்டும்
Are you too pregnt?மேலும்
-
எனது ஆதரவால் தோல்வியில் இருந்து இஸ்ரேல் பிரதமர் தப்பினார்; அதிபர் டிரம்ப் தம்பட்டம்
-
வாரிசுகளின் பேச்சை கேட்டு கண்கலங்கிய முகேஷ் அம்பானி
-
ஹிந்து அல்லாதவரை கோவிலுக்குள் அனுமதித்தால் புனிதத்தன்மை சீர்குலையும்: உயர் நீதிமன்றம் காட்டம்
-
பொது இடத்தில் ரகளை: 28 பேர் கைது
-
‛மாஜி’ அமைச்சர் மகேசுக்கு லஞ்சம் தி.மு.க., நிர்வாகி ஆடியோ வைரல்
-
தடையை மீறும் காரைக்கால் மீனவர்கள் ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவில் மீன்பிடிப்பு