தடையை மீறும் காரைக்கால் மீனவர்கள் ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவில் மீன்பிடிப்பு
ராமேஸ்வரம்:
புயல் எச்சரிக்கை தடையை மீறி ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு பகுதியில் காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித்தனர்.
அர்னாப் புயல் எச்சரிக்கையால் அக்.,25 முதல் வங்கக் கடலில் மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ராமேஸ்வரம், புதுச்சேரி மற்றும் புதுக்கோட்டை, நாகை, கடலுார், சென்னை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். இதனால் நேற்றுடன் 4 நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.
மீனவர் குடும்பத்தினர் அன்றாட செலவுக்கு பரிதவிக்கும் நிலையில், நேற்று (அக்.,27) ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு கடல் பகுதியில் காரைக்கால் மீனவர்கள் ஏராளமான ஆழ்கடல் விசைப்படகுகளில் மீன் பிடித்தனர். 4 நாட்களாக புயல் எச்சரிக்கை தடை விதித்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் தடையை மீறி அதுவும் பல கி.மீ., பயணித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கும் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்கின்றனர்.
இதனால் புயல் தடை நீங்கிய பின் மீன்பிடிக்க சென்றால் மீன்வரத்தின்றி நஷ்டம் ஏற்படும். எனவே தடையை மீறி மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
இன்றைய தங்க விலை நிலவரம்; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்