எனது ஆதரவால் தோல்வியில் இருந்து இஸ்ரேல் பிரதமர் தப்பினார்; அதிபர் டிரம்ப் தம்பட்டம்
-நமது நிருபர்-
மேற்காசிய நாடான இஸ்ரேல், 1948ல் நிறுவப்பட்டதில் இருந்து, அங்கு கூட்டணி அரசுகளே அமைந்துள்ளன. கடந்த, 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல், அதைத் தொடர்ந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்கள், மேற்காசியாவில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் பார்லிமென்டுக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 120 இடங்களில், 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும்.1996ல் இருந்து வெவ்வேறு கால கட்டங்களில் மூன்று முறை, 19 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இதுவரை இல்லாத சாதனை அளவாக, 77 சதவீத ஓட்டுகள் பதிவானது. இவற்றை எண்ணும் பணி, நேற்று இரவே துவங்கியது. இதுவரை, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடக்கிறது. கட்சிகள் பெறும் ஓட்டுக்களின் அடிப்படையில், எம்.பி., இடங்கள் ஒதுக்கப்படும். அதன்படி, 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும்.
ஆளும் கூட்டணி
தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சித் தலைமையிலான கூட்டணி, 53 இடங்களைப் பெறுகிறது. இதில் லிகுட் கட்சி, 26 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
ஐக்கிய தோரா ஜூடாயிசம், ஷாஷ், ஓட்ஸ்மா யேகுடிட் கட்சிகள், தலா ஏழு இடங்களிலும், ஜியோனிஸ்ட் கட்சி, ஆறு இடங்களையும் பெறுகின்றன.
எதிர்க்கட்சிகள் கூட்டணி
முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசன்கோட்டின் யாஷார் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு, 48 இடங்கள் கிடைக்கும். இதில் யாஷார் கட்சி மட்டும் 21 இடங்களை பிடிக்கிறது. முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தலைமையிலான பியாக்த் கட்சி, 12, ஜனநாயகக் கட்சி, எட்டு, இஸ்ரேல் பெய்டுனு, ஏழு இடங்களையும் பெறுகின்றன.
அரசுக் கட்சி கூட்டணி
பாலஸ்தீனத்தை தனி நாடாகக் கோரும் அரேபியர்கள், நாட்டின் மக்கள் தொகையில், 20 சதவீதம் உள்ளனர். இரண்டு அரபுக் கட்சிகள், கூட்டணி அமைந்துள்ளன. இந்தக் கூட்டணி, 19 இடங்களைப் பிடித்துள்ளது.
தற்போதைய நிலையில், எந்தக் கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அதிபர் உத்தரவிடலாம். பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் கொடுக்கப்படும்.
இந்த மூன்று கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும், மற்றொரு கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை. அதனால், இஸ்ரேலில் மிக விரைவில் மீண்டும் தேர்தல் நடக்கும் சூழ்நிலை உருவாகும்.
இஸ்ரேலில், 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும், கூட்டணி அமையாததால், ஐந்து முறை தேர்தல் நடந்துள்ளது.
@block_Y@
தேர்தலில் இருந்து தப்பியுள்ளார்!
தேர்தல் முடிவு தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். அதனால், இஸ்ரேல் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து நெதன்யாகு தப்பியுள்ளார் என தெரிவித்துள்ளார்.block_Y
NETAN did shit and urinated because of me only Trumps hidden voice
உன்னாலதான் சுலபமாக ஜெயித்திருக்க வேண்டிய நேதன்யாஹூ தோல்வியின் விளிம்பில் போய் நின்னாப்படி.
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு T. M. சௌந்தராஜன் பாட்டு.
திரு சீமான் சொன்னது போல், டிரம்ப் ஒரு கிறுக்கன், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பூமி சுற்றவது கூட தன்னால் தான் என்று கூட சொல்லுவார். தமிழகத்தில் பல லட்சம் கோடி கடனை ஏற்றிவிட்டு , தமிழக மக்களை டாஸ்மாக் குடியில் மூழ்கடித்துவிட்டு , தமிழகம் முன்னேறியது தன்னால்தான் என்று கடந்த கால ஆட்சியினர், தீமூகவினர் கூறுவது போலத்தான்.
இதில் டரம்ப் சொல்வதில் ஒரு 10% உண்மையிருந்தாலும். காலம் காலமாகவே அமெரிக்க அதிபர்களின சப்போர்ட்டு இஸரேலுக்கு இருந்து இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இப்போது சோஷியல. மீடியா இருப்பதனால் வெளிப்படையாக தெரிகிறது. அவ்வளவுதான்
எல்நினோ விற்கு காரணம் நீ தான்னு சொல்லிக்கோ டிரம்ப்.
இதற்கும் ட்ரம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லா இடங்களிலும் முஸ்லீம் நாடுகளின் மத்தியில் யூதர்கள் பயமுறுத்துகிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவால் விலகிச் செல்ல முடியாத புவியியலை அவர்களால் மாற்ற முடியாது. எனவே, இந்தியா செய்வது போல், அவர்கள் நிம்மதியாக வாழ தங்கள் வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் பிரச்சனைகள் தொடரும்.
அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வெற்றியைத் தான்தான் சாத்தியப்படுத்தினேன் என்று கூறுவதற்குப் பின்னணியில் அரசியல் ஆதரவு Public Endorsement, இருநாட்டு கூட்டணி உத்திகள் மற்றும் வாக்கு வங்கியின் மீதான ராஜதந்திர தாக்கம் ஆகியவை மட்டுமே காரணமாக அமைந்தன. அமெரிக்க அதிபரோ அல்லது அதிகாரியோ வேறு நாட்டின் தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டு நேரடியாக வாக்களிக்க முடியாது என்றபோதிலும், இஸ்ரேலியத் தேர்தலில் நெதன்யாகுவின் நிலையைத் தலைகீழாக மாற்றியதாக ட்ரம்ப் உரிமை கோருவதற்குக் காரணம்.
அரசியல் ஆதரவு மற்றும் பிம்பம் Public Endorsement: இஸ்ரேலிய அரசியலில் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதே ஒரு தலைவரின் மிகப்பெரிய தகுதியாகக் கருதப்படுகிறது. வாக்குப்பதிவுக்குச் சில நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கமான Truth Social-இல் நெதன்யாகுவுக்கு ஆதரவாகப் பதிவு ஒன்றை வெளியிட்டார். தேர்தல் கருத்துக்கணிப்புகளில் Exit Polls கடுமையான பின்னடைவைச் சந்தித்து வந்த நெதன்யாகுவுக்கு, ட்ரம்பின் இந்த பகிரங்க ஆதரவு வலதுசாரி வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு அலையை உருவாக்கி, வாக்குகளைத் திருப்ப உதவியதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு & வெளியுறவுக் கொள்கை தாக்கம்: இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழலில், அமெரிக்காவின் முழுமையான ராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவு இஸ்ரேலுக்கு மிக அவசியம். ட்ரம்ப் மீண்டும் ஆட்சியில் இருப்பதால், நெதன்யாகு பிரதமராகத் தொடர்ந்தால் மட்டுமே அமெரிக்காவின் முழு பாதுகாப்பு ஆதரவு இஸ்ரேலுக்குக் கிடைக்கும் என்ற எண்ணம் இஸ்ரேலிய பொதுமக்களுக்கு ஏற்பட்டது.அரசியல் லாபம் Political Credit: தேர்தலில் நெதன்யாகு மீண்டெழுந்தவுடன், எனது ஆதரவால்தான் தோற்கவிருந்த நெதன்யாகு மீண்டும் ஆட்டத்திற்குள் வந்து வெற்றி நிலையை அடைந்தார்" என்று ட்ரம்ப் தனக்கான உரிமையைக் கோரினார். இது நேரடியாக வாக்குகளைச் செலுத்திய வெற்றி அல்ல மாறாக, அமெரிக்க அதிபரின் ஒரு வலுவான ஆதரவு அறிக்கை Endorsement, இஸ்ரேலிய வாக்காளர்களின் மனநிலையை மாற்றி நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கு வாக்களிக்க வைத்தது என்பதால் மட்டுமே ட்ரம்ப் இந்த வெற்றியின் பெருமையைச் சொந்தம் கொண்டாடுகிறார். இஸ்ரேலிய தேர்தலின் பின்னணி மற்றும் வெளியுறவுத் தாக்கங்கள்.
அப்படியே, Netanyahu அமெரிக்க அதிபர் Trump வெற்றி பெற்றிருந்தால்கூட, அந்த வெற்றியை இப்போது வெளிப்படையாகப் பேசக் கூடாது, தம்பட்டம் பண்ணக் அடிக்க கூடாது என்பது ஒரு சின்ன இங்கீதம்கூட Trump-க்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது, ஒன்று மட்டும் உண்மை. இன்று உலகத்திற்கு அமைதி இல்லை. உலகமெங்கும் போர் நடத்துவதற்கு முதற்காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப்தான். அதை யாராலும் மறுக்க முடியாது....நன்று
அடடே அங்கே ஒரு அமெரிக்க சீமான் உள்ளார்
இஸரேல் தேர்தலுக்கும் ட்ரம்ப்புக்கும் என்ன சம்மந்தம்? வெட்டி பந்தா பேட்டி!
டிரம்ப் ஒரு கிறுக்கன் அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனுக்கே தெரியாது.