25 டன் கொட்டைப்பாக்கு கடத்திய இருவர் கைது
துாத்துக்குடி:
இந்தோனேஷியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் கப்பலில், 25 டன் கொட்டைப்பாக்கு மூட்டைகள் கடத்திய சம்பவத்தில், இருவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து கொட்டுப்பாக்குகளை இறக்குமதி செய்ய மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால், சிலர் போலி ஆவணங்களை காண்பித்து கொட்டைப்பாக்குகளை இறக்குமதி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்தோனேஷியா நாட்டில் இருந்து துாத்துக்குடி துறைமுகம் வந்த ஒரு கப்பலில் இருந்த, 40 அடி நீள கண்டெய்னர் பெட்டியை சந்தேகத்தின்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
முறையான ஆவணங்கள் இல்லாமல், சுமார் 2 கோடி ரூபாய் வரி எய்ப்பு செய்யும் வகையில், 25 டன் கொட்டை பாக்கு மூட்டைகள் இருந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக துாத்துக்குடியை சேர்ந்த சொர்ணராஜ், 37, கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த முகமதுசபீர், 43, ஆகியோரை அதிகாரிகள் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்; பங்குச்சந்தையில் 21% கூடுதல் விலைக்கு விற்பனை
-
சென்னையில் 673 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்
-
டொயோட்டா 'கிளான்ஸா' 2026 3 சிலிண்டர் இன்ஜின், அடாஸ் 2 பாதுகாப்பு வருகை
-
அல்ட்ராவைய்லட் 'எக்ஸ் - 47' 343 கி.மீ., ரேஞ்ச் தரும் இ.வி., பைக்
-
2018 முதல் தமிழகத்தில் முன்னிலை பி.எம்.டபிள்யூ., தலைவர் பெருமிதம்
-
இந்தியாவில் ஹோண்டா ஆப்ரோட் பைக்குகள்