ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்; பங்குச்சந்தையில் 21% கூடுதல் விலைக்கு விற்பனை
-நமது சிறப்பு நிருபர்-
உலகிலேயே ஒரு கோடிக்கும் மேலான விண்ணப்பங்களை பெற்ற முதல் ஐ.பி.ஓ., என்ற சாதனையை ஜியோ படைத்துள்ளது. ஜியோ ஐ.பி.ஓ., வெளியீட்டின் இறுதியில், மொத்தம் 22.19 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. அதிகபட்சமாக, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 70.55 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
கடந்த வாரத்தில் ரூ.1,119க்கு ஐபிஓ., வெளியிடப்பட்ட நிலையில், இன்று (அக்டோபர் 28) பங்குச்சந்தையில் ரூ.1359க்கு விற்பனையாகிறது. இது, 21 சதவீதம் கூடுதலாகும். நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. மும்பையில் ஜியோ பிளாட்பார்ம்ஸின் பங்குச் சந்தை அறிமுக விழா கோலாகலமாக நடந்தது.

@block_P@
உங்களால் உருவானது!
இதுவரை இல்லாத வகையில் ரூ.30,213 கோடி ஐபிஓ வெளியீடு முக்கியத்தும் பெற்றது. நிகழ்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ரீஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி பேசுகையில், ''ஜியோ குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு நன்றி; உங்களால் உருவானது ஜியோ. உங்களுடைய கனவை நிறைவேற்றுவது தான் எங்கள் நோக்கம்; பிரதமர் மோடிக்கு நன்றி'', என்றார்.block_P
@block_G@
முதலீட்டாளர்களுக்கு நன்றி!
ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி பேசுகையில், ''ஜியோ பிளார்ட்பார்ம்ஸ் ஐபிஓ வெளியீடு வெற்றி பெற்றுள்ளது. எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. ஜியோவின் புதிய பங்குதாரர்களுக்கும், வெற்றிக்கு காரணமான ஒவ்வொரு முதலீட்டார்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
50 ஆண்டுகளில் ரிலையன்ஸ் செய்ததை அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஜியோ செய்யும்; உலக அளவில் முக்கிய நிறுவனமாக ஜியோவை மாற்றுவோம். இந்தியாவில் இணைய சேவை வசதி மேம்பட்டு இருக்கிறது, மலை பகுதிகளிலும் தற்போது ஜியோ இணைய சேவையை வழங்கி கொண்டு இருக்கிறோம்'' என்றார்.block_G
மொத்தம் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு விண்ணப்பங்கள் வந்தன. அதுவும் ஒன்றேகால் கோடி பாரத குடிமக்கள் வங்கிகள் மூலம் வெள்ளைப்பணமாக செலுத்தப்பட்டது. பாரத மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்ற ராகுலின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்துள்ளனர்.
இப்படித்தான் பலவருடங்களுக்கு முன்பாக அணில் அம்பானியின் RCOM என்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ipo வில் சாதனை படைத்தது ஆனால் முதல் நாள் வர்த்தகத்திலேயே 3 சதவிகிதத்துக்கும் குறைவான விலைக்கு விழுந்தது பிறகு படுபாதாள அடிவிழுந்தது அந்த அடியின் வடு முதலீட்டாளர்களின் முதுகில் இன்னும் இருக்கும் என்று நினைக்கிறேன்.. இதுவும் ஒரு சினிமா கவர்ச்சி போன்றதுதான் மிகஎச்சரிக்கை அவசியம்
its name was reliance power
நெட் வொர்க் சரியாக கிடைப்பதில்லை என்ற புகார் இருந்தாலும் இந்திய நிறுவனம் என்பதால் முதலீட்டாளர்கள் ஆதரவு அளிக்கின்றனர். இதை புரிந்து கொண்டு அனைத்து பகுதியுலும் தங்கு தடையற்ற கவரேஜ் கிடைக்க வழி செய்ய வேண்டும். எனது வீட்டில் அருமையாக இருந்த நெட்வொர்க் கடந்த 8 ஆண்டுகளில் மிகமோசமாக இருக்கின்றது. பல முறை புகார் அளித்தும் பயன் இல்லை. கீழ் நிலையில் இருப்பவர்கள் பிஎஸ்என்எல் பணியாளர்களைப்போல பணியாற்றுகிறார்கள். நிர்வாகம் சரியாக கண்காணிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிஎஸ்என்எல் போன்ற நிலை ஏற்படும்.
அவர்கள் பி எஸ் என் எல் பணியாளர்கள்தாம். சம்பளம் அங்கு வாங்கி கொண்டு இங்கு பகுதி நேர வேலை செய்கிறார்கள்,
தற்போது நினைக்கிறேன் ஐபிஓ காசு கொடுத்து வாங்கி இருக்கலாம் என்று
அண்ணே படம் இன்னும் முடியல இது வெறும் இன்டெர்வெல் தான்??
இப்பவே முடிவு எடுக்காதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க??
sullan அவர்களே இந்த முதலீடு முழுவதும் கடனை அடைக்க போவதாக அறிவித்துள்ளார். இனி வரும் வருவாய் அனைத்தும் முதலீட்டாளர்கள் பகுதியில் வரும். பங்கு சந்தை எப்போதும் ஏறும் இறங்கும். சன் குழுமத்தின் பங்கு வட்டி கட்டினேன் என்று மக்கள் தலையில் மிளகாய் அறைத்நு தெரியாதாமேலும்
-
ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை அறநிலையத்துறை நியமிப்பதை உறுதியாக அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கண்டிப்பு
-
100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் வினியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
-
ஏஐ சிப் குறித்த தகவல்: என்விடியா சிஇஓவை உளவுபார்த்த சீனா
-
இஸ்ரேலில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்