இந்தியாவில் ஹோண்டா ஆப்ரோட் பைக்குகள்

'மோட்டோகிராஸ், என்ட்யூரோ' ஆகிய இரு விதமான ஆப்ரோட் பைக்குகளை இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக 'ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ்' நிறுவனத்தின் சி.இ.ஒ., சுட்சுமு ஒட்டானி தெரிவித்துள்ளார்.

பொது சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி உள்ள ஆப்-ரோடு பைக்குகள் மட்டுமின்றி, பிரத்யேக பந்தயங்களுக்காக உருவாக்கப்படும் பைக்குகளையும் இங்கு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் 'சி.ஆர்.எப்.,' வரிசையில் உள்ள அடிப்படை பைக்குகள் முதல் பந்தைய பைக்குகள் வரை பல்வேறு மாடல்கள் உலகளவில் விற்பனையில் உள்ளன.

'இந்தியன் சூப்பர்கிராஸ் ரேஸிங் லீக்' ஆப்ரோட் பைக் பந்தயத்தில், 'சி.ஆர்.எப்., 250ஆர்' மற்றும் '450ஆர்' பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில், 'சி.ஆர்.எப்., 300எல்' மற்றும் 'சி.ஆர்.எப்., 300 ரேலி' பைக்குகள், இங்கு அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளது.

Advertisement