துணை ஜனாதிபதி வருகைக்காக தயாராகும் 'ஹெலிபேட்'
சின்னாளபட்டி: திண்டுக்கல் காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஹெலிபேட் ஆயத்த பணி நடந்தது.
அக்.,30ல் இப்பல்கலையின் 39வது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்கின்றனர்.
விழா நடக்கும் பல்நோக்கு அரங்கம், பிரத்யேக பந்தல், விருந்தினர் இல்லங்கள் ஆகியன தயார்படுத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தொடர் கண்காணிப்பில் உள்ளன.
சிறப்பு பாதுகாப்பு படையுடன் இணைந்து பல்கலை வளாகம் முழுவதும் போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி உள்ளனர். காந்திகிராம சுகாதார அறக்கட்டளை வளாகத்தில் 3 ஹெலிகாப்டர்கள் நிற்கும் வகையில் ஹெலிபேடு தயாராகி வருகிறது.
முதற்கட்டமாக ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அடுத்தடுத்து ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த தளத்தில் இருந்து 3 ஏக்கர் சுற்றளவு காலியிடத்தில் பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்காக இப்பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
ஹெலிபேடு, பல்கலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் துர்கா ஆய்வு செய்தார். பல்கலை பதிவாளர் மாரிமுத்து, போலீஸ் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும்
-
தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா; சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே
-
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 முறை தங்கம் வென்ற இந்திய தடகள வீரர் தற்கொலை
-
சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு; வீரமணியின் டிரைவர்களை அடையாளம் காட்டிய சிறுமி
-
மாஜி அமைச்சர் மகேஷ் லஞ்ச வழக்கில் அடுத்த ரெய்டு: யார் அந்த சண்முகப்பிரியா?
-
தேனி சிறையில் இருந்த தப்பிய 17 கைதிகளில் 15 பேர் சிக்கினர்; 2 பேரை தேடுகிறது தனிப்படை!
-
எங்கும் பாதுகாப்பில்லை; குற்றவாளிகளுக்கு பயமில்லை; ஸ்டாலின் குற்றச்சாட்டு