நவ.,1ல் கிராம சபை கூட்டம்

கரூர்:வரும் நவ.,1ல் கிராம சபை கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் உள்ள, 158 பஞ்சாயத்துகளில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடக்கிறது.

இதில், பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும்.

தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையை தடுத்தல், தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement