தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்: முதல்வர் விஜய்
சென்னை: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல்வருடன் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ், ராஜ்மோகன், வெங்கடரமணன், சபாநாயகர் பிரபாகர் உள்ளிட்டோரும் முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அங்கு கூடியிருந்த தொண்டர்கள், மக்களை பார்த்து கை அசைத்து விட்டு, பிறகு முதல்வர் விஜய் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கை: தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன்.
வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னையில் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!
இதுபோன்ற தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தால் போதாது. அனைவரும் அவரைப்போல் தேசத்தையும் தெய்வீகத்தையும் மனதார போற்றவேண்டும்.மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!