போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

சேலம்: சேலம், உடையாப்பட்டி ஹோலிகிராஸ் குழும பள்ளிகள் மற்றும் தன்னார்வ அமைப்பு இணைந்து, அப்பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சியை நேற்று நடத்தின.

கலெக்டர் இளம்பகவத், மாநகர போலீஸ் கமிஷனர் பாபு முன்னிலையில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், தன்னார்வ அமைப்பினர் என, 3,015 பேர் இணைந்து, 'போதைப்பொருளுக்கு வேண்டாம் சொல்லுவோம்; விளையாட்டுக்கு ஆம் சொல்வோம்' என்ற வாசகங்களை, மனித வடிவில் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisement