கால்வாயில் இறைச்சி கழிவுகள் கொட்டினால் அபராதம்
தர்மபுரி: தர்மபுரி அருகேவுள்ள இலக்கியம்பட்டி பஞ்.,ல் கடந்த, 15 ஆண்டு
களுக்கு முன் சாலையில் இருபுறமும், 200 மீட்டர் நீளமுள்ள சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது.
இது துார்வாராமல் மண் மூடி கிடந்ததால், மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து, சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அவ்வப்போது வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி நின்றதால், மக்கள் அவதியடைந்தனர். பஞ்., நிர்வாகம் சார்பில், கால்வாயில் தேங்கியிருந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதில், புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். கால்வாய்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து, தர்மபுரி பி.டி.ஓ., அப்துல்கலாம் நேற்று, இலக்கியம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, இறைச்சி கடை உரிமையாளர்கள் கழிவுகளை சாக்கடை கால்வாயில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் தேங்காமல் தடுக்க, தேவையான பணிகளை மேற்கொள்ள, பஞ்., செயலர் சரவணனுக்கு அறிவுறுத்தினார்.
மேலும்
-
கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி