ஜி.எஸ்.டி., அணிகள் பங்கேற்ற 'நட்புறவு கிரிக்கெட் போட்டி'
ஓசூர்: ஓசூரில் நடந்த நட்புறவு கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெற்ற அணி
களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஜி.எஸ்.டி., வருமான வரித்துறை மற்றும் ஆடிட்டர்களுக்கு இடையேயான நட்புறவு கிரிக்கெட் போட்டி கள், ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தன. அனைவரும் ஒன்றிணைந்து நட்புறவுடன் இருக்கவும், பணிச்சுமைக்கு மத்தியில், தங்களை உற்சாகப்படுத்தி கொள்ளவும், கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மறைந்த ஆடிட்டர் பாஸ்கர் நினைவு கோப்பை என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டன. மத்திய, மாநில ஜி.எஸ்.டி., அணிகள் உட்பட மொத்தம், 4 அணிகள் பங்கேற்று, தலா, 3 போட்டிகளை விளையாடின.
இதில், முதல் இரு இடங்களை பிடித்த, 'டேக்ஸ் டைகர்ஸ் அணி'யும், 'டேக்ஸ் டைட்டன்ஸ் அணி'யும்
இறுதிபோட்டியில் மோதின. முதலில் விளையாடிய டேக்ஸ் 'டைட்டன்ஸ் அணி', நிர்ணயிக்கப்பட்ட, 10 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, 55 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய, 'டேக்ஸ் டைகர்ஸ் அணி', 3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி பிடித்து வெற்றி பெற்றது.
அந்த அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற, 'டேக்ஸ் டைட்டன்ஸ் அணி'க்கும், வணிகவரித்துறை இணை இயக்குனர் ஜானகி, பரிசு பொருட்கள் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார்.
மேலும்
-
தினமலர் சொன்னது: முதல்வர் செய்தார்
-
மிஸ்டர் மூளைக்காரன் ம.தி.மு.க., வழியில் மகிழ்மதி
-
'மாருதி' நிறுவனத்தின் இயக்குநராக காங்., சோனியா 'நியமிக்கப்பட்டது எப்படி?': பா.ஜ., கேள்வி
-
கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்: ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு பேச்சு
-
'வரதட்சணைக்காக பெண்கள் தற்கொலைக்கு துாண்டப்படுவது நம் சமூகத்தின் அவமானம்': டில்லி உயர் நீதிமன்றம் வேதனை
-
அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் சரிவால் இந்திய மியூச்சுவல் பண்டுகளுக்கு அழுத்தம்