கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறனறி தேசிய தொழிற்சான்று வழங்கல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கூட்டுறவு தொழிற்
பயிற்சி நிலையத்தில் கடந்த, ஜூலை மாதம் அகில இந்திய தொழிற்தேர்வு நடந்தது.
இதில், தேர்ச்சி பெற்ற பயிற்சி யாளர்களுக்கும், தொழிற்பிரிவு வாரியாக, முதல் மூன்று இடங்களை பெற்றவர்
களுக்கும், கேடயம் மற்றும் மெரிட் சான்றிதழ் உள்ளிட்டவைகள் வழங்கும் திறன்
பட்டமளிப்பு விழா நடந்தது.
இளநிலை பயிற்சி அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். பர்கூர் கூட்டுறவு நிலைய முதல்வர்
சுப்ரமணி தலைமை வகித்து இப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களும் வேலை வாய்ப்புகளை பற்றி எடுத்துரைத்தார்.
கிருஷ்ணா கிட்னி சென்டர் இயக்குனர், மருத்துவர் ஸ்ரீனிவாசன், தாமரை இண்டேன் காஸ் உரிமையாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் பரிசுகளையும், தேசிய தொழிற் சான்றிதழ்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற பயிற்சியாளர்
களுக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தனர். இளநிலை பயிற்சி அலுவலர்கள் ஸ்ரீதேவி, சுதா, பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தொலைந்து போன உறவு: தொழில்நுட்பத்தால் மீட்பு
-
தினமலர் சொன்னது: முதல்வர் செய்தார்
-
மிஸ்டர் மூளைக்காரன் ம.தி.மு.க., வழியில் மகிழ்மதி
-
'மாருதி' நிறுவனத்தின் இயக்குநராக காங்., சோனியா 'நியமிக்கப்பட்டது எப்படி?': பா.ஜ., கேள்வி
-
கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்: ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு பேச்சு
-
'வரதட்சணைக்காக பெண்கள் தற்கொலைக்கு துாண்டப்படுவது நம் சமூகத்தின் அவமானம்': டில்லி உயர் நீதிமன்றம் வேதனை