பணம் கேட்டு அக்காவை மிரட்டிய தம்பி கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள தளி ஹட்கோ ஜெயசக்தி நகரை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி சவிதா, 48. இவரது தம்பி, தச்சு தொழிலாளி வெங்கடேசன், 44.
இவர், ஓசூர் பார்வதி நகரில் வசிக்கிறார். சவிதாவின் சேமிப்பு தொகையான, 3 லட்சம் ரூபாயில், தனக்கு பங்கு தர வெங்கடேசன் கேட்டுள்ளார். சவிதா மறுத்ததால், இருவருக்கும் கடந்த, 19ம் தேதி மாலை, 4:30 மணிக்கு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வெங்கடேசன், அக்கா சவிதாவை, தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டல் விடுத்தார். சவிதா புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், வெங்கடேசனை நேற்று முன்தினம் கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொலைந்து போன உறவு: தொழில்நுட்பத்தால் மீட்பு
-
தினமலர் சொன்னது: முதல்வர் செய்தார்
-
மிஸ்டர் மூளைக்காரன் ம.தி.மு.க., வழியில் மகிழ்மதி
-
'மாருதி' நிறுவனத்தின் இயக்குநராக காங்., சோனியா 'நியமிக்கப்பட்டது எப்படி?': பா.ஜ., கேள்வி
-
கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்: ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு பேச்சு
-
'வரதட்சணைக்காக பெண்கள் தற்கொலைக்கு துாண்டப்படுவது நம் சமூகத்தின் அவமானம்': டில்லி உயர் நீதிமன்றம் வேதனை
Advertisement
Advertisement