தகராறில் பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் நாயகி, 53. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் திருமால், 55. உறவினர்கள்.

நேற்று முன்தினம் இவர்கள் இருக்கும் பகுதியில் பஞ்., மூலம் குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்டது. அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், நாயகியை திருமால் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி, 37, ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கினர். இது குறித்து நாயகி அளித்த புகார் படி, ஊத்தங்கரை போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement