210 தெருநாய்களுக்கு 'ரேபீஸ்' தடுப்பூசி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 5வது வார்டுக்கு உட்பட்ட கே.சி.சி., நகர் பகுதியில், தெருநாய்களுக்கு, 'ரேபீஸ்' வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

இதில் மொத்தம், 210 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, 'ரேபீஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டன. 'ரேபீஸ்' பரவலை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து முகாமில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement