இன்று ஓசூர் மாநகர தி.மு.க., செயற்குழு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தி.மு.க., மாநகர செயலாளரும், மேயருமான சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓசூர், மாநகர, தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று (நவ., 22) காலை, 10:00 மணிக்கு, மாநகர தி.மு.க., அலுவலகத்தில் நடக்கிறது.

மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமை வகிக்கிறார். மாநகர, பகுதி கழக செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் மற்றும் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, மாநகரத்திற்கு உட்பட்ட மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement