மரம் நடும் விழா
மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே கணேஷ் நகரில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் 294வது வார மரம் நடும் விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. உறுப்பினர் ஜெயபாலன் முன்னிலை வகிக்க, பாலமுருகன் வரவேற்றார். ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. உறுப்பினர்கள் பாஸ்கரன், கார்த்திக், அசோக்குமார், பிரேம்குமார், ஐஸ்வர்யா, விக்னேஸ்வரி, ரூபன், நிலாஸ்ரீ, கீர்த்திஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர். ஆலோசகர் பிரபு நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement