திண்டிவனம் – திருவண்ணாமலை சாலையில் பொதுமக்கள் மறியல்

விழுப்புரம்: கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்த பொதுமக்கள் திண்டிவனம் – திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் புத்திரன்,55; இவர் மூலம் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கிரிப்டோ கரன்சி பெயரில் லட்ச கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இதில் பணத்தை இழந்து பாதித்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று சங்கர் புத்திரனை சந்திக்க அவரது சொந்த ஊரான சாலை கிராமத்திற்கு வந்தனர்.

அங்கு, சங்கர் புத்திரன் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திண்டிவனம் – திருவண்ணாமலை சாலையில் மதியம் 12:00 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அனைவரும் சமாதானமாகி மறியலை கைவிட்டு 12:15 மணியளவில் கலைந்து சென்றனர்.

Advertisement