குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி்
கடலுார்: கடலுார், முதுநகரில் குண்டும் குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். கடலுார், முதுநகர் சங்கரன் தெருவில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இங்கு பல இடங்களில் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளம் இருப்பது தெரியாமல் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனியாவது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement