பள்ளமாகி பல நாளாச்சு சீரமைப்பது எப்போது?

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், பேங்க் அருகே குழி ஏற்பட்டுள்ளதால் நடந்து செல்லும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், தினமும் ஏராளமான மக்கள் நடந்து செல்கின்றனர். வாகனங்களும் அதிகளவில் செல்கின்றன. இந்நிலையில், பேரூராட்சி வணிக வளாகம் அருகே சர்வீஸ் ரோட்டோரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன், குழாய் உடைப்பால் குழி ஏற்பட்டது.

இதை முறையாக சரி செய்யாமல், குழியை சுற்றிலும் கற்கள் அடுக்கி, தற்காலிக தடுப்பு வைத்துள்ளனர். இன்று வரை நிரந்தர தீர்வு காணவில்லை. இதனால், இரவு நேரத்தில் ரோட்டில் நடந்து செல்லும் மக்கள் தவறுதலாக கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே, இந்த குழியை விரைவில் சரி செய்ய வேண்டும்.

மக்கள் கூறியதாவது:

சர்வீஸ் ரோட்டோரம், நடைபாதையில் சாலையோர கடைகள் அதிகம் இருப்பதால் மக்கள் ரோட்டில் பயணிக்கின்றனர். தற்போது, ரோட்டில் குழி ஏற்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சில நாட்கள் மின்விளக்குகள் எரியாததால் பாதசாரிகள் தடுமாறுவதுடன், விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குழியை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement